ராஜேந்திர பாலாஜியின் தங்கைக்காக வாதாடிய வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறிய போலீசார்: நீதிமன்றம் கண்டனம்!

விசாரணை என்ற பெயரில், வழக்கறிஞர் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய செயலை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை கண்டித்துள்ளத்து.

madurai-bench-high-court
HC condemns Police raided the house of a lawyer who was arguing for Rajendra Balaji relatives

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்களுக்காக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானவர் உட்பட, இரு வழக்கறிஞர்களை துன்புறுத்திய, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், டிஜிபிக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக “விசாரணை என்ற பெயரில் மனுதாரரை துன்புறுத்த வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, லட்சுமி என்ற பெண் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். மனுதாரர் சார்பில் வக்கீல் இ மாரீஸ் குமார் ஆஜரானார்.

சமீபத்தில், அவர் தனது வாடிக்கையாளரின் இருப்பிடத்தை விசாரிக்க அனுமதியின்றி, போலீஸ் அதிகாரிகள் தனது வீட்டிற்குள் நுழைந்ததால் ஏற்பட்ட இடையூறு குறித்து மதுரைக் கிளை முன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார், ”என்று BCTN&PY செயலாளர், PS அமல்ராஜ் தனது புகாரில் தெரிவித்துள்ளார். லட்சுமி பாலாஜியின் சகோதரி.

BCTN&PY இன் படி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முன் உத்தரவு இல்லாமல் வழக்கறிஞரைத் தேடிய காவல்துறையின் செயலை மதுரைக் கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.

முன்னதாக, தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரான தியாக காமராஜனின் அலுவலகத்திற்குள் முன் அனுமதியின்றி நுழைந்த காவல்துறை அதிகாரிகள், குற்றவாளியைத் தேடுகிறோம் என்ற போர்வையில் அவரது அலுவலகத்தை கொடூரமாக சேதப்படுத்திய மற்றொரு சம்பவத்தையும் அமல்ராஜ் சுட்டிக்காட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Hc condemns police raided the house of a lawyer who was arguing for rajendra balaji relatives

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express