தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்துக்குள் மூட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில், உணவுப் பொருள்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
இதற்கிடையே, 2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் ' கொரோனா ஊரடங்கை காரணம் கூறி, பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக’ தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி’ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்னிலையில் ந டைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களில் மூட சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக்கில் பார்களை இணைத்து நடத்த சட்டத்தில் இடமில்லை. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம்’ கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது.
மதுபான விற்பனை சட்டத்தின்படி பார்களை நடத்துவதற்கான அனுமதியை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க முடியாது. மேலும், டாஸ்மாக் கடை அருகே உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையையும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே’ டாஸ்மாக் மதுபான கடைகளில் பார்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “