Advertisment

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளை கூண்டோடு டிரான்ஸ்பர் செய்ய உத்தரவு!

லஞ்சம் பெறுவதும், கொடுப்பது தவறு என்பது குறித்த விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை மாநகராட்சி ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாற்றம்

சென்னை மாநகராட்சி ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாற்றம்

சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை ஷெனாய் நகர் சேர்ந்த லட்சுமி இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் மருத்துவ மனை சார்பில் ஜெனரேட்டர் வைக்கபட்டுள்ளதாகவும் அந்த ஜெனரேட்டரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவே சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள ஜெனரேட்டர் அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் கடந்த 14 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி இருந்தார். மாநகராட்சி எல்லைக்குள் சட்டவிரோத கட்டுமானங்கள், முறைகேடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்டியலிட்டார்.

மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சட்ட விரோத கட்டுமானங்களை தடுக்க மாநகராட்சி எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருப்பது சென்னை மக்களை விரக்தி அடைய செய்துள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய நீதிபதி, மாநகராட்சி எல்லைக்குள் விதிகளை பின்பற்றி கட்டிட ஒப்புதல்கள் வழங்கப்படுகிறதா? சட்ட விரோத கட்டுமானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?என்பது குறித்து பதிலளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஊழல் நடவடிக்கைகள் மலிந்து விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, ஊழல் நடவடிக்ககளில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மாநகராட்சி அதிகாரிகள் சொத்து விவரங்கள், ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள், மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

லஞ்சம் கொடுக்காமல் கட்டிட ஒப்புதல் உள்ளிட்ட எந்த சான்றிதழும் பெற முடியத நிலை உள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிப்பதாக லோக் அதாலத் ஆய்வு கூட்டத்தில் உத்தரவாதம் அளித்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்காத அதிகாரிகள் மீது மாநகராட்சி ஆணையர் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த் வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தற்போது நாளுக்கு நாள் லஞ்சம் அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் லஞ்ச ஒழிப்பு சட்டங்களை முழுமையாக அமல்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் சட்டத்திற்குப் புறம்பான லஞ்சம் பெறுவதை தடுக்கவும் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது அதன்படி தற்சமயம் சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் நான்கு வாரங்களில் பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோர் கலந்தாலோசனை செய்து மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் கண்ணியமான மற்றும் நேர்மையான அதிகாரிகளை கண்டறிந்து நியமிக்க வேண்டும்.

அனைத்து மாநகராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் மேலும் அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்று மையம் அமைக்க வேண்டும் அங்கு புகார்கள் பெறப்பட வேண்டும் அவ்வாறு பெறப்பட்ட புகார்களை முறையாக நகராட்சி ஆணையரின் பார்வைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அனைத்து மாநகராட்சி மற்றும் அதை சார்ந்த அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்கின்ற வகையில் பெரிய அளவிலான விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.

லஞ்சம் பெறுவதும், கொடுப்பது தவறு என்பது குறித்த விழிப்புணர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு லஞ்சம் பெறும் நபர்களின் அல்லது அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு தொடர்பான விளம்பரங்களையும் பத்திரிக்கைகளுக்கு அளிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு தொடர்பாக அடிக்கடி சிறப்பு குழுக்களை அமைத்து, அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அல்லது தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை 12 வாரங்களுக்குள் மாநகராட்சி ஆணையர் பெறவேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட விவரங்களை அவர்கள் பணியில் சேர்ந்த பொழுது தற்போதும் உள்ள சொத்து வேறு பாடுகளை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும். விசாரணையில் முறைகேடுகளில் இருந்தால் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மேலும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனுமதி இல்லாத கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து உள்ளிட்டவர்கள் மீட்பது தொடர்பாக நிலை குழுவைக் கூட்டி உரிய முறையில் ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

அவ்வாறான ஆய்வுக் கூட்டங்கள் மூலமாக எடுக்கப்படும் முடிவுகளின் மூலமாக விதி மீறல் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மற்றும் அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவுகளை அமல் படுத்தி விட்டு அது தொடர்பான விவரங்களை 12 வார காலத்திற்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment