பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு!

எந்த அமைப்பை தடை செய்வது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அனுக வேண்டும்

எந்த அமைப்பை தடை செய்வது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அனுக வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
popular front of india

பாபுலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பாபுலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, சிமி அமைப்புடன் தொடர்புடையாகவும், ஆயுதங்கள், கடத்தல் போன்றவற்றில் அந்த அமைப்பு தொடர்புடையதாக மத்திய உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் பாபுலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கேரளாவில் இதுவரை 106 மதக்கலவர வழக்குகள் இந்த அமைப்பிற்கு தொடர்புடையதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011 மும்பை குண்டுவெடிப்பு, 2012 பூனே குண்டுவெடிப்பு உள்ளிட்ட வழக்கில் இந்த அமைப்பிற்கு தொடர்புள்ளதாக மத்திய உளவு துறை அறிக்கை அளித்துள்ளதாக தெரிகின்றது. எனவே பாபுலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், எந்த அமைப்பை தடை செய்வது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அனுக வேண்டும் என்று கூறி

Advertisment
Advertisements

மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: