மதுரையில் உலகத் தமிழ் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் வளர்ச்சி குறித்து கடந்த 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீது நேற்று (செவ்வாய்க் கிழமை) விசாரணை நடைபெற்றது. அப்போது, மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் என்பவர் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், மதுரை தமிழ் சங்கத்தில் தமிழ் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டும், சங்கத்தில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், இதில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜே.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உலகத் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும்.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒதுக்கப்படும் தொகை, வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்று கூற முடியாது என்று கூறியது.
மனுதாரர் தரப்பில், சங்கத்தின் சில நோக்கங்கள் குறித்து கூறப்பட்டது. அதில், உலகத் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தல், வெளிநாடுகளில் தமிழ் கலைக்களஞ்சியம் வெளியிடுதல்,
தமிழ் ஆராய்ச்சி மையங்கள் தொடங்குதல், கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்துதல் ஆகியவை சங்கத்தின் நோக்கங்களில் சில என்று குறிப்பிடப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil