ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சியில் பங்கேற்கும் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார்

HCL Foundr-Chairman Shiv Nadar will be participate in RSS' event: ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் அக்டோபர் 8 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள விஜயதஷ்மி நிகழ்ச்சியில், எச்.சி.எல் நிறுவனர் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: September 22, 2019, 11:00:52 PM

HCL Foundr-Chairman Shiv Nadar will be participate in RSS event: ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் அக்டோபர் 8 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டு விஜயதஷ்மி நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல் நிறுவனர் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். இந்த ஆண்டு விஜய தசமி நிகழ்ச்சியை அக்டோபர் 8 ஆம் தேதி நாக்பூரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த விஜயதசமி விழாவில் எச்.சி.எல் நிறுவனர்-தலைவர் ஷிவ் நாடார் முக்கிய விருந்தினராக கலந்து கொள்வார் என்று ஆர்.எஸ்.எஸ்.சின் நாக்பூர் ‘மகாநகர் சஞ்சலக்’ அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் லோயா தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.நடத்தும் விஜயதசமி ஆண்டு விழாக்களில் நிகழ்த்தப்படும் உரைகள் அரசியல் நோக்கர்களால் தொடர்ந்து உண்ணிப்பாக கவனிக்கப்படுபவை. அதனால், ஆர்.எஸ்.எஸ்.சின் விஜயதசமி தசரா நிகழ்வுகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இதற்கு முன்பு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.சின் விஜயதசமி ஆண்டு விழா கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற குழந்தைகள் உரிமைகள் ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, முன்னாள் தலித் மதத் தலைவர் நிர்மல் தாஸ் மஹராஜ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு விஜயதசமி நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், இந்துத்துவம் இந்த நாட்டின் நித்திய நெறிமுறைகள் என்று கூறினார்.

இந்த சூழலில்தான், நாக்பூரில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல் நிறுவனர் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவ் நாடார் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Hcl foundr chairman shiv nadar will be participate in annual event of rss vijayadasami event

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X