health secretary radhakrishnan family : கொரோனா நோய் தடுப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் மனைவி, மகன் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.அவரின் செயல்பாடுகள் பல்வேறு தரப்பினரிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ராதாகிருஷ்ணன், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்வதால் வீட்டிற்கு போகாமல் அரசினர் விடுதியில் தனியாக தங்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் என தொடர்ந்து பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது, மாமனார், மாமியார் ஆகியோருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணனும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மதுரையில் இருந்து அவரது மாமனார் மற்றும் மாமியார் சென்னை வந்துள்ளனர். முறைப்படி அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்த மீண்ட அக்காவை குத்தாட்டம் போட்டு வரவேற்ற தங்கை (வைரல் வீடியோ)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil