தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்பட 15 இடங்களில் வெயிலின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட்டைத் தாண்டி சதம் அடித்துள்ளது. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வெப்பநிலை பதிவாகி உச்சம் தொட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வெப்ப அலை வீசி வருவதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்படுள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (23.04.2024) சேலம், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் உள்பட 15 இடங்களில் வெயிலின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் ஃபாரன்ஹீட்டைத் தாண்டி சதம் அடித்துள்ளது. சேலத்தில் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வெப்பநிலை பதிவாகி உச்சம் தொட்டுள்ளது.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் வெப்பநிலைக்கு மேல் பதிவான இடங்கள் வருமாறு:
சேலம் 108.14, ஈரோடு 107.6, திருப்பத்தூர் 106.88, வேலூர் 106.7, கரூர் பரமத்தி 106.7, மதுரை நகரம் 105.08, தருமபுரி 105.8, திருச்சி 104.18, நாமக்கல் 104.9, மதுரை விமான நிலையம் 103.82, திருத்தனி 103.64, கோவை 102.56, தஞ்சாவூர் 102.2, பாளையங்கோட்டை 102.2 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
மேலும், வேலூர், காஞ்சிபுரத்தில் புதன்கிழமை (24.04.2024) பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“