கோடைக் காலம் முடிந்து தென் மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன் ஹீட்டைத் தாண்டி சதம் அடித்துள்ளது. அதனால், உங்களுடைய பகுதியில் வெப்பநிலை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லா அளவுக்கு வெயிலின் வெப்பம் வாட்டி வதைத்தது. வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் மட்டுமே நிலவி வந்த வெயில் வெப்பம் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜுன் என தொடர்ந்து வருகிறது.
இதனிடையே, ஜூன் மாதத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கி வெயிலின் தாக்கம் தனிந்தது. ஜூலை மாதத்தில் வெயிலின் தாக்கம் முழுவதுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில இடங்களில் தொடந்து வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் மதுரை விமான நிலையம், மதுரை நகரம், பாளையங்கோட்டை ஆகிய 3 இடங்களில் வெயில் வெப்பநிலை வியாழக்கிழமை (ஜூலை 4) 100 டிகிரியைத் தாண்டி சதம் அடித்துள்ளது.
அதன்படி, மதுரை விமான நிலையம் பகுதியில் 102.38 டிகிரி, மதுரை நகரம் 101.84 டிகிரி, பாளையங்கோட்டை 100.4 டிகிரி என பதிவாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“