தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அனல்காற்று வீசும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று ( மே 13ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
இன்று (மே 14) முதல் வரும் 17ம் தேதி வரை, தமிழகத்தின் பலபகுதிகளில் அனல்காற்று வீசக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய சூழல் நிலவும். காற்றின் வேகம், மணிக்கு 40 முதல் 50 கி.மீ.ஒட்டியே இருக்கும்.
சென்னையில் வானம் சற்று மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி மீனவர்களுக்கான எச்சரிக்கை - கடலின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும்.
14ம் தேதி மதியம் 1 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (14ம் தேதி) மற்றும் நாளை (15ம் தேதி) மிதமான மழை பெய்யும்.
கனமழைக்கு வாய்ப்பு : தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று (14ம் தேதி) கனமழை பெய்யக்கூடும்.
அனல் காற்று எச்சரிக்கை : நாளை (15ம் தேதி) முதல் 18ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல்காற்று வீசும்.