Weather forecast today LIVE Updates: தமிழகம் மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் அனல்காற்று வீசும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம், நேற்று ( மே 20ம் தேதி) இரவு 9 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி,மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். மே 23 மற்றும் 24ம் தேதி தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூழல் நிலவும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் இருக்கும்.
கனமழை எச்சரிக்கை : மே 24ம் தேதி, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மழைப்பதிவு : ஏதும் இல்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.
சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 21ம் தேதி) மதியம் 1 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
அனல்காற்று எச்சரிக்கை : தமிழகம் மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் அனல்காற்று வீசும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வடக்கு உட்புற கர்நாடகா மற்றும் ராயலசீமா பகுதிகளில் வெப்பநிலை, சராசரி அளவை காட்டிலும் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும்.
தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று ( 21ம் தேதி) மற்றும் நாளை (22ம் தேதி) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை : வரும் 24ம் தேதி, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும்.
தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் , கேரளா, தெற்கு உட்புற கர்நாடகா, ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகள் ம்றறும் ராயலசீமா உள்ளிட்ட பலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய சூழல் நிலவும். காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி.மீ அளவிற்கு இருக்கும்.
Weather forecast today - weather in chennai : சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.