தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 டிகிரி பாரன்ஹீட்-க்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் 109 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர். வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, உள் கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை 3 நாட்களுக்கு நீடிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ச் எச்சரிக்கையும் மையம் விடுத்துள்ளது.
அதோடு, ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று (ஏப்ரல் 29) வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“