வங்கக் கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது நாளை (அக். 17) சென்னை அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு வடகிழக்கு பருவமழையும் தொடங்கியதாக மையம் அறிவித்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராணிப்பேட்டை தவிர மற்ற 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள பொதுத் துறை நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மட்டும் விடுமுறை
தொடர்மழை காரணமாக, சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“