தென் மேற்கு பருவமழை விலகி வடகிழக்கு பருவ மழை தொடங்குகிறது என்றும் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி இணைந்து வருகிறது என்பதால் அதன் தாக்கத்தில் மழை பொழியும் என்று சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சென்னையைக் குறி வைக்கும் கன மழைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை குறித்து இன்று (அக்டோபர் 13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாலச்சந்திரன் கூறியதாவது: “14-ம் தேதி விழுப்புரம் அரியலூர் பெரம்பலூர் கடலூர் மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
அக்டோபர் 15-ம் தேதி அந்த ஒரு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓர் இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 16-ம் தேதி திருவள்ளூர்ம், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெயர் கூடும்.
அக்டோபர் 17-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிதமான முறையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை நமக்கு இன்று முதல் விட்டு விட்டு மழை பெய்ய துவங்கி நாளை முதல் படிப்படியாக அதிகரித்து 15, 16 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரைக்கும் அக்டோபர் 13 முதல் 15-ம் தேதி வரையில் தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்.
16 , 17 தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். வங்க கடல் பகுதியை பொறுத்தவரையில் இன்று தெற்கு வங்க கடல் பகுதி சூறாவளி காற்று 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், 14, 15 தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் தெற்கு வங்க கடல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று ஆனது 35 கிலோமீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடகிழக்கு பருவ மழை பொறுத்த வரைக்கும் தற்பொழுது இந்தியாவின் மதிய பகுதி மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து வரும் இரண்டு தினங்களில் முற்றாக விலகி வடகிழக்கு பருவமழை 15, 16 தேதிகளில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது
இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழக மற்றும் புதுவையில் 95 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலகட்டத்தில், அக்டோபரில் இயல்பு அளவு 57.4 மில்லி மீட்டர் மழை. இது இந்த அக்டோபரில் இதுவரை 66 சதவீதம் இயல்பை விட அதிகம் பதிவாகியிருக்கிறது.
அரபிக்கடல் பகுதியில் நமக்கு ஒரு குறைந்த வலுவான காற்றழுத்த தாழ் பகுதி இருக்கிறது, தென்கிழக்கு வங்க கடலில் மேலடுக்கு காற்று சுழற்சி இருக்கிறது.
அதனுடைய தாக்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகிறது அது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15 16 தேதிகளில் புதுவை வடதமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் வரக்கூடும். அதன் தாக்கத்தில் நமக்கு இப்போது மழை மழை இருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரையில் இன்று முதலே படிப்படியாக மழை அதிகரித்து நாளை முதல் கொஞ்சம் அதிகரித்து 15 16 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
தற்போது இரண்டு நிகழ்வுகள் இருக்கிறது அரபிக் கடல் கடலில் ஒன்று இருக்கிறது விரிகுடாவில் ஒன்று இருக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். தொடர்ந்து இந்த இரண்டும் இணைந்து இருக்கக்கூடிய காற்றினுடைய போக்கு, இரண்டுக்கும் தொடர்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், மத்திய பகுதிகளில் மெதுவாக கிழக்கு திசை காற்று வந்து கொண்டிருக்கிறது.
இப்போது தென்மேற்கு பருவமழை இன்று கூட நிறைய பகுதியில் விலகியிருக்கிறது. தொடர்ந்து அடுத்து வரும் இரண்டு தினங்களில் முற்றாக விலகி, 15, 16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“