கடும் மழை வெள்ளம் காரணமாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு தினமும் 60 பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் 2 நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளன. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் சில இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் வருகை மிகக் குறைவாக இருப்பதால், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு தினமும் 60 பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. மேலும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல, தென் மாவட்டங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“