வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் மழை தொடங்கியுள்ளது. நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் மழை படிப்படியா அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகள் வெள்ளக் காடானது.
சிவானந்த காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கியதால் அவ்வழியாக வந்த தனியார் பேருந்து பயணிகளுடன் சிக்கிக்கொண்டது. அதே போல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம். அரியலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் மழை காரணமாக இன்று (அக்.14) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் மக்கள் வாழ்கையில் இடையூறு இல்லை. இயல்பு நிலை திரும்புகிறது. எனவே கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி,கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“