தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது , இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்தது.
இதனால் ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் ஒரு பகுதியாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆனைமலை அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஆழியார் சோதனை சாவடி அருகே கவி அருவியில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் காற்றாற்று வெள்ளம் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“