தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், வெள்ளிக்கிழமை (05.01.2024) மதியம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு செய்தியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்களுக்கன வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையைத் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு செய்தியில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (06.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
06.01.2024 இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை (06.01.2024) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப் பகுதிகளில் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால், சனிக்கிழமை (06.01.2024) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (07.01.2024) ஆகிய நாட்களில் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வும் மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“