இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) நாளை (நவ.24) திங்கள்கிழமை 5 தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“