Advertisment

நவம்பர் கடைசியில் களைகட்டுமாம் மழை - அட, நல்ல செய்தியா இருக்கே....

Chennai weather : சென்னையின் பலபகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்துவரும் நிலையில், நவம்பர் கடைசி வாரத்தில் சென்னைக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chennai weather, tamil nadu weather, rainfall. Tropical wave,tamil nadu,monsoon,Cloud,Atmospheric convection, imd, pradeep john, tamil nadu weatherman

chennai, chennai weather, tamil nadu weather, rainfall. Tropical wave,tamil nadu,monsoon,Cloud,Atmospheric convection, imd, pradeep john, tamil nadu weatherman, சென்னை, வானிலை, மழை, தமிழக வானிலை, தமிழ்நாடு வெதர்மேன், டிசம்பர், நவம்பர். இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னையின் பலபகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்துவரும் நிலையில், நவம்பர் கடைசி வாரத்தில் சென்னைக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையின் பலபகுதிகளில் சுவிட்ச் ஆன் ஆப் பண்ணுவது போல, இரவு மற்றும் காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, இந்த நவம்பர் மாதம் ஈரமான மாதமாகவே உணரப்படுகிறது. சென்னையில் மீண்டும் ஒரு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்று அனைவரும் அஞ்சியிருந்த நிலையில், பருவமழை, சென்னை மக்களை காப்பாற்றிவிட்டது என்றே சொல்ல வேண்டும். நவம்பர் இறுதிநாட்களில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் கடலோரப்பகுதிகளில் நவம்பர் 28ம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 28 மற்றும் 29 தேதிகளில் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சகன்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலைய ஆய்வுமைய புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, Madden-Julian oscillation (MJO) காரணமாக, மேகமூட்டம் மற்றும் மழைப்பொழிவு சாத்தியமாக உள்ளது என்றும், இந்த மேகமூட்டத்தால், இம்மாத இறுதிநாட்களில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் .

MJO, தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்குத்திசையிலிருந்து வீசும் காற்று சாதகமாக உள்ளது. இது இலங்கைக்கு அருகே உருவாக உள்ளது. இதன்காரணமாக, டிசம்பர் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்.

சனிக்கிழமை நிலவரப்படி, அக்டோபர் 1 முதலான காலகட்டத்தில், சென்னையில் 533.8 மிமீ மழை பெய்திருக்க வேண்டும் ஆனால், 334.1 மிமீ அளவிற்கே மழை பெய்துள்ளது. இது 37 சதவீதம் குறைவு ஆகும்.

இந்த காலகட்டத்தில் தமிழகம் 323.9 மிமீ மழை பெற்றிருக்க வேண்டும், ஆனால் 298.8 மிமீ அளவிற்கே மழை பெய்துள்ளது. இது 8 சதவீதம் பற்றாக்குறை ஆகும்.

வடகிழக்கு பருவமழையால், சராசரியாக சென்னை 867.4 மி.மீ மழையையும், தமிழகம் 438. மி,மீ மழையையும் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வானிலை மைய தகவலின்படி, அடுத்த 48 மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை இருக்கும். வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு சென்னையில் மழை குறைய துவங்கும். தெற்கு கடலோர பகுதிகளில் மழை பெய்யும். டிசம்பர் 27ம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு மழையை எதிர்பார்க்கலாம் என்று ஸ்கைமெட் வானிலை இணையதளம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Tamilnadu Weather Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment