காரமடை பிளிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையில் பிளிச்சி துலக்கனூரில் இருக்கும் தரைமட்ட பாலம் உடைந்து வெள்ளம் வெளியேறிதில் வாழைத்தோட்டம், வீடுகள் சேதமடைந்துள்ளதை தொடர்ந்து உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கோவையில் நேற்று இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. நகர் பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாழ்வான இடங்களில் மழை நீர் நிரம்பியுள்ளது.
காரமடை பிளிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையில் பிளிச்சி துலக்கனூர் பகுதியில்
இருக்கும் தரைமட்ட பாலம் உடைந்து வெள்ளம் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழைத் தோட்டம், வீடுகளில் மழை நீர் புகுந்து சேதமடைந்துள்ளது. புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“