தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஒரிரு இடங்களில் கனமழையும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 1 வார காலமாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் இன்று (அக்.4) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் இன்று ஒரு நாள் கூடுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1-5-ம் வகுப்புக்கு அக்.9 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 6-12 வகுப்புக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“