/indian-express-tamil/media/media_files/2024/12/13/57pVqzxoE4bp0fJ3zcIo.jpg)
பிரதீப் ஜான் அப்டேட்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கொடைக்கானலுக்கு இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம்.
“சந்தேகத்திற்கு இடமின்றி, நீண்ட காலமாக தமிழகத்திற்கு பருவமழை பெய்து வருகிறது. அதில் மிகக் கடுமையான நாள் நேற்றுதான். கிட்டத்தட்ட நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. ஒரு மாவட்டம் மட்டுமின்றி அனைத்து மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.
மாஞ்சோலையில் - 500 மிமீ,
மயிலாடுதுறை - கடலூரில் 300 மி.மீ.,
தூத்துக்குடி, கோவில்பட்டியில் - 350+ மி.மீ
பதிவாகியுள்ளன. இதேபோல குற்றாலம் வரலாற்று சிறப்புமிக்க மழைப்பொழிவை கண்டுள்ளது. பெரம்பலூர்-அரியலூர் இடையேவும் பரவலாக மழை பெய்தது. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
Without a doubt the heaviest day to Tamil Nadu monsoon in a long time. In almost all district one heavy rainfall recorded.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 13, 2024
======================
Not able to mention one district. Every district has got heavy rains.
Manjolai la Oothu 500 mm poiduchu.
Mayiladuthurai-Cuddalore… pic.twitter.com/bnevvlG82v
ராணிப்பேட்டை வெள்ளத்தில் மிதக்கிறது, அதாவது நந்தியாற்றில் அதிக அளவு நீர் வெளியேறி, பூண்டி அணைக்கு 13,000 கனஅடி நீர் வரத்து உள்ளது.
ஆயக்குடி மற்றும் தென்காசி மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மழை மோசமாக பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று துளிக்கூட மழை பெய்யாது.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.