/indian-express-tamil/media/media_files/2025/09/08/rain-heavy-weather-report-2025-09-08-17-44-22.jpg)
வங்கக் கடலின் மேல் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “வங்கக் கடலின் மேல் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08.09.2025: இன்று தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
09.09.2025: தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் இடியுடன் கூடிய காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.09.205: தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் இடியுடன் கூடிய காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையைப் பொறுத்தவரை, இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
நாளை (செப்டம்பர் 9) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
செப்டம்பர் 8 மற்றும் 9: குமரிக்கடல், அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
செப்டம்பர் 10: எச்சரிக்கை எதுவும் இல்லை.
செப்டம்பர் 11 மற்றும் 12: தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
செப்டம்பர் 8: தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
செப்டம்பர் 9 மற்றும் 10: எச்சரிக்கை எதுவும் இல்லை.
செப்டம்பர் 11: தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் அனேகப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
செப்டம்பர் 8: குஜராத்-வட கொங்கன் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு-மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
செப்டம்பர் 9: மத்திய மேற்கு-தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வட குஜராத் கடலோரப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.