Advertisment

தக்காளி கிலோ ரூ.100; திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தக்காளி பயிர்கள் சேதமடைந்து வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

author-image
WebDesk
New Update
Tomato price hike

Tomato price hike

கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். தக்காளி மட்டுமல்லாது பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் காய்கறிகளின் விலை, குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. திங்களன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இருமடங்காக உயர்ந்து கிலோவுக்கு ரூ.80-90 ஆக உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் கூறுகையில், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் திடீர் வெப்பநிலை அதிகரித்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகள் வரத்தை சமாளித்து விலையை கட்டுக்குள் வைத்திருந்தன,

ஆனால் கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் தக்காளி பயிர்கள் சேதமடைந்து வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றனர்.

மேலும், தக்காளி மட்டுமின்றி அனைத்து காய்கறிகளின் விலையும் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஜூலையில் துவங்கும் மூன்றாம் பயிர் காலத்திற்கு ஏற்ப வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

தற்போதைய நிலவரப்படி, 1 கிலோ பீன்ஸ் - ரூ 80, கத்திரிக்காய் - ரூ 50, முருங்கைக்காய்- ரூ 60, கேரட் - ரூ 40-60, பீட்ரூட் - ரூ 30, உருளைக்கிழங்கு - ரூ.15-20 வரை விற்பனை செய்யப்படுகிறது என்று கூறினார்.

அரசு நடவடிக்கை

அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரிசி, பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்து மாவட்டங்களிலும் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், "வெப்பத்தின் தாக்கத்தால் பயிர்கள் கருகியதே தக்காளி விலை உயர்வுக்கு காரணம். அனைத்து காய்கறிகளின் விலையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து காய்கறிகளின் விலை அதிகமாகும் பட்சத்தில், நியாயவிலைக் கடைகளிலும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment