கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (டிச.18) அதிகனமழைக்கான ரெட் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்த இந்த மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி மெதுவாக நகர்ந்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், தென் மாவட்டங்களில் இன்று (18.12.2023) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி விடுமுறை
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மட்டும் விடுமுறை
தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு.
மேலும், திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதற்கு உட்பட்ட கல்லூரிகளில் திங்கள்கிழமை (18.12.2023) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைகக்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“