திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களுக்கு இன்று (டிச.18) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தாமரபரணி ஆறு, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக தென் மாவட்டகளுக்கு செல்லும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை- குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று (டிச.18) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம்- ஈரோடு எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில் ( சிறப்புப் பயணம்), திருநெல்வேலி- தூத்துக்குடி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் ( சிறப்புப் பயணம்), தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவு செய்யப்படாத ரயில் ( சிறப்புப் பயணம்) ஆகியவற்றின் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil