சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி மின்னலுடன் பெய்த கனமழையால் கோயம்பேடு, மதுரவாயல், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சென்னையில் சில பகுதிகளில் சாலைகள் மழை வெள்ளத்தில் தெப்பமாக மிதந்தது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் வெயில் வெப்பம் மிகவும் புழுக்கமாக இருந்த நிலையில், இரவு நேரத்தில், சென்னை கோயம்பேடு, நெற்குன்றம், வடபழனி, கோடம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட சென்னை முழுவதும் பரவலான பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது.
அதே போல, சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, ஐயப்பன்தாங்கல், பட்டாபிராம், திருநின்றவூர், மதுரவாயல், போரூர், ராமாபுரம், அம்பத்தூர், நொளம்பூர், செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்தது.
மேலும், சென்னையில், அடையாறு, நந்தனம், ஆலந்தூர், ஆசென்ட்ரல், புரசைவாக்கம், ஓட்டேரி, பெசன்ட் நகர், குரோம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது.
ஒரே நாள் மழையில், சென்னையின் பல சாலைகள் வெள்ளத்தில் மிதந்ததால், இன்னும் மழைக்காலம் வந்தால் என்ன ஆகும் சென்னை வாசிகள் இடையே இந்த மழை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"