/tamil-ie/media/media_files/uploads/2023/08/Rain.jpg)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 6 நாட்களுக்கு மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு (எக்ஸ்பிரஸ் கோப்பு படம்)
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டி: அமைச்சர் உதயநிதி உறுதி
செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரபல தனியார் வானிலை பதிவர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
டெல்டா பகுதி மற்றும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பிரதீப் ஜான் குறிப்பிட்டார்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய புல்லட்டின் படி, ஐஸ் ஹவுஸ் (சென்னை மாவட்டம்) மற்றும் வந்தவாசி (திருவண்ணாமலை மாவட்டம்) பகுதிகளில் முறையே 4 செமீ மற்றும் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடந்த கவுன்சில் கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நகரில் உள்ள அனைத்து கால்வாய்களிலும் தூர்வாரவும், மழைநீர் வடிகால் திட்டப்பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
கடந்த வாரம், சென்னை மாநகராட்சி நீர்நிலைகளுக்கு அருகில் குப்பை கொட்டுவதைத் தடுக்கவும், பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்கவும், நகரின் 15 மண்டலங்களில் தேவையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும், ‘செயல்களுக்கு அழைப்பு’ என்ற பெயரில் மெகா துப்புரவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.