வெள்ளப்பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும்.
மேலும் இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை நிரம்பி வருகின்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“