கோவை, சிறுவாணி - தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
கோவையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.
மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், நரசிபுரம், வடவள்ளி, மருதமலை, பேரூர், துடியலூர், கவுண்டம்பாளையம் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் பிற்பகலில் திடீரென சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது.
இதனால் சிறுவாணி செல்லும் பிரதான சாலை பேருந்து அருகே மாதாம்பட்டியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சி அளித்தது அதில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“