கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது.
இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக புறநகர் பகுதிகளில் வீரபாண்டி பகுதியில் உள்ள தரைப்பாலம், மாநகர் பகுதியில் அவிநாசி மேம்பாலத்திற்கு அடியிலும், லங்கா கார்னர் ரயில் பாலத்திற்கு அடியிலும் அதிக அளவிலான மழை நீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/suEvwx0ZSfjmhH0nI9S5.jpeg)
/indian-express-tamil/media/media_files/aV3DY1F1Yaojr0cCO6Iu.jpeg)
இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விடுமுறை அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“