/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-06-at-1.42.01-PM.jpeg)
கடலூர் மாவட்டம் வெள்ளைக்கரைப் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் வெள்ளைக்கரை அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் வாழை அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது பொதுமக்கள் வ வெளியே வர முடியாமலும் வீடுகளில் இருக்க முடியாமலும் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் வெள்ளைக்கரை கிராமம் அருகே உள்ள ராமாபுரம் கீழப்பாளையம், வழுதாளம், வழுதாளம் பட்டு .புலியூர், ஒதியடி குப்பம், அரசடி குப்பம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், வழி கட்டியாங்குப்பம், உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இடி மின்னல் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது.
கடலூரில் கனமழை: 500ஏக்கர் வாழை வேரோடு சாய்ந்தது
— Indian Express Tamil (@IeTamil) June 6, 2023
வீடியோ: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி pic.twitter.com/vhDcxnSmFV
இதில், சுமார் 500 ஏக்கர் வாழை அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இங்கிருந்து வாழை இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை நேற்று அடித்த சூறைக்காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் மரங்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழையை மண்ணில் கிடப்பதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.
இப்பகுதியில் சுமார் 500 ஏக்க நிலங்களில் கற்பூரவள்ளி, பூவம் பழம், பேயம்பழம், தேன் கதலி செவ்வாழை, வாழை பயிரிட்டு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.
இன்னும் பத்து நாட்களில் வெட்ட வேண்டிய வாழை இந்த சூறைக்காற்றுக்கு பலியாகிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.