குன்னூரில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
Advertisment
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் குன்னூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜாஜி நகர் பகுதியில் 50 அடி நீளம் கொண்ட கருங்கல் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் தடுப்புச் சுவருக்கு கீழ்பகுதியில் வசித்து வந்த பத்துக்கும் மேற்பட்டோர் வீட்டில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கிய எட்டு பேரை மீட்டனர்.
Advertisment
Advertisements
மேலும் வீட்டில் சிக்கியிருந்த மூன்று பேர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த தடுப்புச் சுவரை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
மேலும் கனமழை காரணமாக ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“