கோவை மாநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்து இரண்டு மணி நேரமாக கனமழை பெய்தது. குறிப்பாக ஆர் எஸ் புரம், ரேஸ் கோர்ஸ், சின்னவேடம்பட்டி, ரயில் நிலையம், உக்கடம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
Advertisment
இதன் காரணமாக அவிநாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி மேம்பாலம் ஆகிய மேம்பாலங்களுக்கு அடியில் மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து தடையானது.
கோவையில் கனமழை பெய்தது, சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன
இதனை அடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பி விட்டனர். கனமழை ஓய்ந்ததை அடுத்து தற்போது மழை நீரை அகற்றும் பணியை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றன.
Advertisment
Advertisements
கனமழையின் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அனைத்து போக்குவரத்து மேம்பாலங்களுக்கு மேலே மாற்றி விடப்பட்டதால் அவிநாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேசமயம் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக ரேஸ்கோர்ஸ் ஆர் எஸ் புரம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் அங்குள்ள வாகனங்கள் மட்டும் சேதமடைந்தது. இதனிடையே கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொள்ளும் மழை நீர் தேங்கி நின்றதால் உள்நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“