scorecardresearch

ஸ்தம்பித்த சென்னையின் நுழைவு வாயில்: அணிவகுத்த வாகனங்கள்

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், நகரின் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஸ்தம்பித்த சென்னையின் நுழைவு வாயில்: அணிவகுத்த வாகனங்கள்
TN Rains

சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், நகரின் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு (டிசம்பர் 15ஆம் தேதி வரை) அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மிதமான மழை பெய்து வருவதால், இன்று (திங்கள்கிழமை) நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புறநகரில் தாம்பரம் – பெருங்களத்தூரில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சென்னையின் சுற்றுப்புறம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை முன்னெச்சரிக்கையை கருத்தில் கொண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பல்வேறு கண்காணிப்பு மையங்களில் பதிவான மழையை தெரிவித்துள்ளனர், அவை சின்னக்கல்லாறு (கோவை), திருவள்ளூர் (திருவள்ளூர் மாவட்டம்) ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்) 8 செ.மீ., அதைத் தொடர்ந்து விருத்தாசலம் (கடலூர் மாவட்டம்), கோமுகி அணை (அரியலூர் மாவட்டம்), வால்பாறை (கோவை மாவட்டம்) தலா 6 செ.மீ. பதிவாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Heavy traffic at chennai due to continuous rain december 12th news

Best of Express