ஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - ஐகோர்ட்

அரசாணை வெளியிட்டால் மட்டும் போதாது... அதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்

ஹெல்மெட் கட்டாய சட்டம் : கட்டாய ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரிய வழக்கில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மோட்டார் வாகன சட்டம் 1988, 1989 சட்டங்களில் 129, 138(3) விதிகளில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது அவசியம். அதே போல் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் அனைவரும் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது இது தொடர்பான அரசாணை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை. தலைக்கவசம் அணியாமல் அணிந்து செல்பவர் தெடர்ந்து உள்ளனர். எனவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிகளை உறுதியாக நடைமுறைபடுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக 2007 ஆம் ஆண்டு அரசு அரசாணை வெளியிட்டதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை உரிய முறையில் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசாணை, வெளியிட்டால் மட்டும் போதாது அதை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தவும், அது தொடர்பாக பிறப்பிக்கபட்ட அரசாணை எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசு இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என தமிழக உள்துறை செயலாளர், போக்குவரத்து செயலாளர், போக்குவரத்து துறை ஆணையர், தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோர் வரும் 23 தேதி பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close