ஒவ்வொரு சமையல் அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று அஞ்சறைப்பெட்டி. அப்படிப்பட்ட அஞ்சறைப்பெட்டியில் என்னென்ன மசாலாக்கள் இருக்க வேண்டும் என்று தெரியுமா? இனி தெரிந்து கொண்டு அஞ்சறை பெட்டி பயன்படுத்துங்கள்.
மாதம் ஒரு முறையாவது அஞ்சறைப் பெட்டியை சுத்தமாக கழுவி காய வைத்து மீண்டும் மசாலாக்கள் நிரப்பி வைக்க வேண்டும்.
அஞ்சறைப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்கள் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் இவை கட்டாயம் இருக்க வேண்டும். இதில் அடிக்கடி பயன்படுத்தாத மிளகிற்கு பதிலாக சோம்பு போட்டு வைக்கலாம்.
அஞ்சறைப்பெட்டியில் உப்பு ஒருபோதும் வைக்க கூடாது. மசாலா டப்பாக்களில் உப்பு வைக்க கூடாது. மேலும் மற்ற மசாலாக்களுடன் சேர்த்து உப்பு வைப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மசாலா டப்பா உள்ளே இது இருந்தா போச்சு!- Kitchen Tips & Tricks in Tamil
உப்பை மற்ற மசாலாக்களுடன் சேர்த்து வைக்கும் போது மசாலாக்களின் வாசமும் நறுமனையும் போய்விடும். மேலும் சில்வர் டப்பாக்களில் உப்பு வைப்பது மிகவும் தவறு. சில்வர் பாத்திரங்களில் உப்பு வைக்கும்போது அதில் நடக்கும் வேதிவினையால் உப்பின் தன்மை மாறிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“