scorecardresearch

திருநெல்வேலி: முறையான அனுமதி பெற்ற கல் குவாரிகள் இயங்க ஐகோர்ட் அனுமதி

திருநெல்வேலி மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி: முறையான அனுமதி பெற்ற கல் குவாரிகள் இயங்க ஐகோர்ட் அனுமதி
பழனி திருமஞ்சன கட்டண வசூல் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில், அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் மே 14 இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பாக முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல டிரான்சிட் பாஸ் அனுமதி வழங்க நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்தார். மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி ரூபாய் மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கல் குவாரிகளை மீண்டும் அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து புதிய நோட்டீஸ் வழங்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: High court allows stone quarries with proper permits to operate in tirunelveli