நியோமேக்ஸ் மோசடி வழக்கு; பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8 ஆம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai Bench of Madras High Court on Neomax financial fraud case Tamil News

நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாகும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisment

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவன பல ஆயிரம் கோடிக்கு முதலீடு வசூலித்து திருப்பி தராமல் மோசடி செய்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மற்றும் தேனி மாவட்டம் கம்பம், தாமரைக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் வாய்ப்பூட்டான்பட்டி கிராமங்களில் உள்ள பல ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தக் கோரி, தேவிகுமார் உட்பட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் நியோமேக்ஸ் சொத்துக்களை முடக்க உத்தரவிட்டு இருந்தது. 

இந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நியோமேக்ஸ் நிறுவன வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. வழக்கில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது எளிமையாகும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் எனக்கூறி மோசடி செய்த நியோமேக்ஸ் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

மேலும், நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகாரளிக்க அக்டோபர் 8 ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது. அக்டோபர் 8 ஆம் தேதி வரை புகார் அளிப்பவர்களுக்கு மட்டும் இழந்த தொகை பெற்றுத்தரப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

க.சண்முகவடிவேல்

Madurai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: