திராவிட மாடல் என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? ஐகோர்ட் கிளை அதிரடி கேள்வி

தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதற்கு ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில், ‘திராவிட மாடல்’ என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Dravida model, High Court Madurai bench, Tamilnadu, Tamil news,

தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, முன்னேற்றத்தைக் குறிப்பிடுவதற்கு ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி வரும் நிலையில், ‘திராவிட மாடல்’ என ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசாணயைப் பின்பற்றாமல், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாணயைப் பின்பற்றாமல், ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள், அனைத்து விதமான அலுவலகங்கள், தமிழக அரசின் 1982-ம் ஆண்டு அரசாணைப்படி தூய தமிழில் பெயர்பலகை இருக்க வேண்டும். இந்த அரசாணைப்படி பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், பல மாதங்கள் ஆன நிலையிலும், தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணை அமல்படுத்தப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத, தமிழ்நாடு ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத் துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், அரசு அலுவலகங்களில் தொடர்புடைய அலுவலகங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி, தூய தமிழில் வைக்கப்பட்டு இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்கள், கடைகள் தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி, தமிழில் பெயர் பலகைகளை வைப்பதில்லை. அவர்கள் மீது தொழிலாளர் நலத்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாகப் பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் பாடப் புத்தகங்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும். மேலும், வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கப்படும் சட்டப்புத்தகங்கள் தமிழில் கொண்டுவர வேண்டும். திராவிட மாடல் என்று கூறப்படுகிறது. அதில் மாடல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் என்ன என்றும் மாடல் என்று ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள் திராவிட மாடல் என்பதை முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசாணைப்படி தமிழ் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை வைக்காமல் இருக்கும் நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: High court madurai bench questions to tn govt why is dravidian model used in english

Exit mobile version