“சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும்” என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்கு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில், அல்லிநகர பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் தங்களது பணியை காவல் துறையினர் இழக்க நேரிடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை செயலர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மகராசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“