/tamil-ie/media/media_files/uploads/2022/03/chennai-high-court-2-1.jpg)
High court order Tamilnadu Govt to retrieve 134 acres of temple land: சென்னை திருவேங்கடமுடையான் வேகடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வெள்ளனூரில் உள்ள திருவேங்கடமுடையான் வேகடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ராதாகிருஷ்ணன் என்பவரால் பொது நல மனு தொடரப்பட்டது. இந்த பொதுநல மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று (மே 25) விசாரணைக்கு வந்தது.
இதையும் படியுங்கள்: சென்னையில் இன்று ஒரே மேடையில் மோடி- ஸ்டாலின்: 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
அப்போது, நிலத்தில் குறிப்பிட்ட பகுதி குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளதாக மனுதாரர் ஏ.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இதுகுறித்து மனுதாரர் இந்த சமய அறநிலையத்துதுறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனாலும், நிலத்தில் குறிப்பிட்டப் பகுதி குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. இதனை அறிந்த மனுதாரர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோயிலுக்குச் சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.