கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழாய்வு குறித்து 982 பக்கம் உள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட மனுவில், 9 மாதங்களில் கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிடவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபாகர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இயக்குநராக இருந்து மேற்கொண்டார்.
இந்த அகழாய்வின் போது 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர் 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையில், கீழடி 1, 2-ம் கட்ட அகழாய்வுகள் குறித்து ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட உத்தரவிட கோரிய மனு மீதான விசாரணையில், கீழடியில் மேற்கொண்டுள்ள அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் மத்திய அரசு வெளியிடவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வரும்நிலையில் 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும் என மத்திய அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடர்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை முடித்து வைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“