scorecardresearch

தமிழகம் முழுவதும் அரசு நில குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High Court order to Govt upload land lease details online across Tamil Nadu
சென்னை உயர் நீதிமன்றம்

மதுரையில் அரசுக்கு சொந்தமான 5.90 ஏக்கர் நிலம் பாண்டியன் ஓட்டல் நிறுவனத்துக்கு 1968ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இந்தக் குத்தகையின் காலம் 25 ஆண்டுகள் ஆகும்.
அந்த வகையில் நிலத்துக்கான குத்தகை காலம் 2008ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.36 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்தை வாடகையாக செலுத்தாவிட்டால், நிலம் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என 2015-ம் ஆண்டு மதுரை வடக்கு தாலுகா தாசில்தாரர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து பாண்டியன் ஓட்டல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “14 ஆண்டுகள் அனுமதியின்றி ஓட்டல் நடத்தி அதிக லாபம் அடைந்துள்ள, பாண்டியன் ஹோட்டல் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

தொடர்ந்து, ஒரு மாதத்தில் பாண்டியன் ஹோட்டலை அப்புறப்படுத்தி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் வாடகை பாக்கியை கணக்கிட்டு உடனடியாக வசூலிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும், தமிழகம் முழுவதும் அரசு நில குத்தகை விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: High court order to govt upload land lease details online across tamil nadu