தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்டாலின். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான தமிழ் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி புத்தகங்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி புத்தகங்கள் ஆகியவற்றை மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். நூலகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே, விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர் நேரில் ஆஜராகி, “மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் 26 ஆயிரத்து 35 புத்தகங்கள் உள்ளன. இங்கு நூலகம் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதில், “தமிழ் மொழியை வளர்க்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். சங்க கால தமிழ் இலக்கியங்களையும், நவீன கால தமிழ் இலக்கியங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: High court order to tn government that steps should be taken for tamil language development

Exit mobile version