தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரிக்கு உதவியாக நியமிக்கப்பட்ட தற்காலிக குழு எந்த நிர்வாக பணிகளையும் மேற்கொள்ளாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இதனை ஏற்று அட்டாக் கமிட்டி நியமனத்துக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அதிகாரியாக என். சேகர், நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.சேகர் நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க தலைவரும் நடிகருமான விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தனி அதிகாரி சேகர்,நிர்வாக பணிகளிகள் உள்ளிட்ட சங்க பணிகளை கவனிக்க அவருக்கு உதவியாக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட 9 பேர் அடங்கிய அட்டாக் குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில் இந்த அட்டாக் குழு நியமித்து தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கதிரேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்காலிக குழுவை நியமிக்க தனி அதிகாரிக்கு எந்த அதிகாரமில்லை எனவும், குழுவில் உள்ள ஏழு பேருக்கு எதிராக சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி அதிகாரியின் உதவிக்காக தான் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது எனவும் உத்தரவாதம் அளித்தார்.
அரசின் இந்த உத்தரவாத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.