புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு: 'அரசியல் உள்நோக்கம் இருப்பதாக மனு' - விசாரணைக்கு தடைவிதித்த ஐகோர்ட்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலைய காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலைய காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு, இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
pussy anana

புஸ்ஸி ஆனந்த் மீதான வழக்கு: அரசியல் உள்நோக்கம் இருப்பதாக மனு - விசாரணைக்கு தடைவிதித்த ஐகோர்ட்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலைய காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சம்பவம் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திருச்சியில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அப்பயணத்துக்குக் காவல்துறை அனுமதி பெறுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த செப்.6 அன்று திருச்சி வந்தார். அப்போது, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார்.

அந்த சமயத்தில், அங்கே ஏராளமான த.வெ.க தொண்டர்கள் திரண்டதால், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்ததால், அவற்றை அப்புறப்படுத்துமாறு காவல்துறையினர் கோரியும், தொண்டர்கள் அதற்கு மறுத்து, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடுதல், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மீது திருச்சி விமான நிலையக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Advertisment
Advertisements

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, புஸ்ஸி ஆனந்த் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், காவல்துறை உள்நோக்கத்துடன் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகளைப் பதிவு செய்துள்ளதால், அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதுவரை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இந்த மனுவை நீதிபதி சுந்தர் மோகன் விசாரித்தார். புஸ்ஸி ஆனந்த் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: