விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் முதல்முறையாக டிராகன் ஃப்ரூட்ஸ் பயிரிடப்பட்டு அறுவடைக்கு ரெடி ஆக உள்ளது இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு கார்த்திகேயன், சுமித்ரா விவசாயிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், 1.0 ஹெக்டர்
பரப்பளவில் ரூ.96,000/- மதிப்பிலான அரசு மானியத்துடன் டிராகன் பழம் கார்த்திகேயன் சுமித்ரா கணவன் மனைவிகள் இருவரும் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் முதல்முறையாக டிராகன் ஃப்ரூட்ஸ் பயிரிட்டார்.
அது தற்போது நன்கு விளைந்து அறுவடை செய்யக்கூடிய நிலையில் உள்ளது
இந்த பழ வகை வரட்சியான பகுதிகளில் அதிகமாக பயிரிடலாம். நமது கிராமப்புறங்களில் அதிகமாக விளையும் சப்பாத்தி கள்ளிச் செடி என்று சொல்வார்கள் அதனுடைய வளர்ச்சியே ஹைபிரிட் செடியை டிராகன் ஃபுட்டாக தற்போது உருவெடுத்துள்ளது விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த செடி பயிரிட்டுள்ளனர் இதனுடைய ஆயுள் காலம் 30 ஆண்டுகளாகும் வருடத்திற்கு சுமாராக 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை லாபம் லாபம் கிடைக்கிறது. டிராகன் ஃப்ரூட் ஒருமுறை பயிரை பயிரிட்டு விட்டால் 30 ஆண்டுகள் நல்ல மகசூல் கிடைக்கும் என தோட்டக்கலை துறை அதிகாரி ராஜலட்சுமி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், இந்தப் பழம் வெள்ளை அணுக்களை அதிகம் நமது உடலில் உற்பத்தி செய்கிறது மேலும் ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் சப்பாத்தி கள்ளி செடி என்ன அதிகம் பார்க்கலாம் அந்தச் செடியில் இருந்து பழுத்து பழத்திலிருந்து எடுக்கப்பட்ட விதையை ஹைபிரேட் ஆக மாத்தி தற்போது வெளிநாட்டில் நல்ல மகசூலை எடுத்து வருகின்றனர் முதல் முதலில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த இரண்டு கிராமத்தில் பயிர் செய்து வெற்றி கண்டுள்ளோம் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் வெள்ளை அணுக்கள் உடம்பில் குறைந்து வரும் அப்பொழுது இந்த படத்தை அதிகம் சாப்பிட்டால் வெள்ளை அணுக்கள் நமது உடலில் உற்பத்தியாகி நமது உடம்பு பூரண குணமாகும் மேலும் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பழமாகும் நியூட்ரிஷியன் அதிகம் பேர் இந்த பழத்தை சாப்பிட சொல்வார்கள் என அவர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, புதன்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இது குறித்து கலெக்டர் கூறியதாவது விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டணை கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், .சுமித்ரா, க/பெ.கார்த்திகேயன் விளைநிலத்தில் 1.0 ஹெக்டர் பரப்பளவில் ரூ.96,000/- மதிப்பிலான அரசு
மானியத்துடன் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது.
டிராகன் பழமானது தற்பொழுது அதிகப்படியான நபர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது. இப்பழமானது 1 ஹெக்டேருக்கு 12 முதல் 15 டன் வரை விளைச்சல் கிடைக்கக்கூடிய தன்மை கொண்டதாக உள்ளது. டிராகன் பழம் பயிரிடுவதற்கு அதிகப்படியான சூரிய வெளிச்சமும், விளைச்சல் மேற்கொள்வதற்கு குறைந்த அளவே நீர்
ஆதாரமும் போதுமானது. டிராகன் பழமானது விளைச்சல் அதிகம் உள்ள காலங்களில் கிலோ ரூ.150-க்கும், விளைச்சல் குறைவான காலத்தில் ஒரு பழம் ரூ.100/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயி சுமித்ரா அவர்கள் தங்களுடைய விளை நிலத்தில் வளரக்கூடிய டிராகன் பழங்களை திண்டிவனம் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இதுபோன்ற அதிக லாபம் தரும் பயிர் வகைகளை பயிரிடுவதற்கு தேவையான வழிமுறைகளை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் அறிந்துகொண்டு தாங்களும் காலத்திற்கேற்றவாறு பயன்தரக்கூடிய பயிர்வகைகளை பயிர் செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, கூறினார். அப்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், வேளாண் இணை இயக்குநர் (பொ) ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் .ராஜலட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“