ஆளுநர் மாளிகையின் உத்தரவுகளை, அரசிடம் கலந்தாலோசிக்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முதன் முறையாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் மாளிகை அல்லது மத்திய அரசு அமைப்புகளான யு.ஜி.சி, ஏ.ஐ.சி.டி.இ இடம் இருந்து வரும் உத்தரவுகளை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று துணைவேந்தர்கள் மாநாட்டில், உயர்கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆளுநர் மாளிகை உத்தரவுகளை அரசின் ஆலோசனையைப் பெறாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது; துணைவேந்தர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“